Wednesday, June 8, 2011


உந்தன் விரல் பிடிக்காத
எந்தன் வாழ்க்கை பயணம்
உன் நினைவுகளுடன்
கல்லறையை நாடியே
நகர்கிறது ....

நீ இல்லாமல் நான் தூங்கும்
பஞ்சு மெத்தை எப்போதும்
எந்தன் கண்களுக்கு
முற்காடாகவே தெரிகிறது ..

நெஞ்சத்தில் நீ மட்டுமே
இருப்பதால் எந்தன் கவிதைகள்
கூட வேறெதை பற்றியும்
சிந்திப்பதில்லை ....
எழுதும் எழுத்துகளும்
நீயாகவே .....

v.m.j.gowsi

No comments:

Post a Comment