Thursday, June 16, 2011


சம்பிரதாயத்துக்கும் சமூகத்துக்கும்
பயந்து ஊரை கூட்டி ஊர்வலம்
ஒருநாள் ஊரவனுக்கு கூத்து
மணமக்களுக்கோ வாழும்
காலம் வரை நடிப்பு .....

பிடித்ததோ பிடிக்கலையோ
ஊர் மலடி என்றிடுமே என்று
குழந்தையும் பிறந்துவிடும்
மனமின்றி வாழ்ந்தாலும்
பிறக்கும் குழந்தைக்காய்
மீண்டும் மனதை கல்லாக்கி
ஒரு வாழ்க்கை ....

இருவரும் நல்லவர்கள்
தான் ஆனால் மனம்
மட்டும் சேராததால்
வாழ்நாள் முழுவதும்
வேஷப்போரட்டம்
ஊருக்காய் உறவுகளுக்காய் .....

பண்பாட்டுக்காக பாசத்தை
வேஷமாக்கி ....தண்ணீரில்
தத்தளிக்கும் மீனாய் கண்ணீரில்
தத்தளிக்கிறது பலரின்
வாழ்க்கை ....

வயது வந்த பெண்ணுக்கோ
ஆணுக்கோ கல்யாணம்
தீர்வில்லை பெற்றோரே !
மனங்களின் போராட்டத்துக்கு
நீங்கள் இடும் அத்திவாரமே !
வருங்காலமே செய்யாதீர்
இந்த தவறை ....
v.m.j.gowsi

No comments:

Post a Comment