Thursday, June 9, 2011


நீ தந்த காதல் நினைவுகள்
என்னுள் வாசம் செய்கிறது
வாடிய மலர் மலராது
மீண்டும் என்பதையும்
மறந்து மலர துடிக்குதடா

உன்னை அன்பால் அணைத்தேன்
காதலால் பூசித்தேன் இதயத்தில்
தாயாய் எண்ணி நேசிச்சேன்
இதுவரை நிஜத்தில்
அரவணைக்காததால் தான்
வார்த்தையால் என்னை
வாட்டுகிறாயா ????

பிரிய மனமின்றி பிரிந்தாலும்
பிரியாத உன் நினைவுகளுடன்
தொடரும் வாழ்க்கை பயணம்
முடிந்திடுமே உன் நினைவுகளுடன் .....
v.m.j.gowsi

No comments:

Post a Comment