Sunday, June 12, 2011


வாழ்வு தேவையா என்று நான் சிந்திக்கவா
என்னை நீ பெற்றாய் .........பிறந்ததுமே வாழ
யோசிக்கும் சிறுவயதிலேயே மரணத்தை
பற்றி சிந்திக்க வைத்து விட்டானே இறைவன் ..........

அப்பா என்று ஆசையாய் அழைக்க எந்தன்
நெஞ்சம் ஆரம்பிக்கும் வேளையிலே .......
கயவர்கள் எந்தன் தந்தை முகத்தை
பார்க்காமலே செய்து விட்டனர் ...........

என்னம்மா எனக்கு வயசு இப்போதானே
இருபத்தாறு முடிகிறது ........எதில் அம்மா
நான் ஜெயித்தேன் .........தோல்வி மட்டும்
தானே .........நேசித்தவனை கூட
நேரில் பார்க்க முடியாத துர்பாக்கிய சாலி ......

வேதனைகள் நெஞ்சை வாட்ட எந்தன்
கல்வியை நான் இழந்தேன் ..........உறவுகளுக்காக
உள்ளத்துக்குள் நேசித்தவனை இழந்தேன் .........
ஆனாலும் ஒன்றில் வெற்றி கண்டேன்

என்ன என்று யோசிக்கிறியா அம்மா .....
நானும் தாயாகி தாய்மை அடைந்து
பெண்மைக்கு பெருமை சேர்த்தது
தான் அம்மா ........

அதற்கும் நன்றி சொல்வேன் என்
தாயானவனுக்கு .......நேசத்தை கொடுத்து
என்னை பிரிந்தாலும் எந்தன் ஆயுளை
காப்பற்றிய ஆயுளானவன்............என் காதல்
காவல் தெய்வம் அம்மா ............

No comments:

Post a Comment