திருமணம் காதலர்களுக்கு ஆபத்து மணியாய்...
மனசுக்கு பிடித்தவன் மனதுக்குள் இருக்க
நெருப்பில் கால் புதைத்து மாலை இடும்
கொண்டாட்டம் ஊரவனுக்கு மணமக்களுக்கு
உள்ளுக்குள் திண்டாட்டம் ........
நாள் பார்த்து உயரம் பார்த்து ஏனைய
பத்து பொருத்தமும் பார்த்து
மனப்பொருத்ததை மட்டும் பத்தோடு
பதினொன்றாய் விட்டு அழகாய்
பத்திரிகை அச்சடித்து கொண்டாடுகின்றனர்
காதல் உள்ளங்கள் உள்ளிருந்து அழுவது
தெரியாமலேயா இல்லை புரியாமலேயா ?
பெற்றோர் பெருமையுடன் உற்றோர்
ஆசிர்வாதம் பெறும் மணமக்களை
ரசித்துக்கொண்டு மண மகளோ (மகனோ )
குனிந்த தலையுடன் கண்களின்
கண்ணீரை மனதின் வேதனையையும்
சேர்த்து கட்டு படுத்தும் கெட்டிக்காரறாய்....
v.m.j.gowsi
No comments:
Post a Comment