Saturday, June 25, 2011


முத்தின் பெருமை சிற்பியின்
தியாகம் ...........
எந்தன் வாழ்வு என்னவனே
உந்தன் அன்பில் ......
v.m.j.gowsi

எந்தன் வாழ்வின் சோகங்களை
என்மீது கொண்ட அன்பிற்காய்
சுமந்த எந்தன் உயிரோவியமே !!!
எத்தனை ரணங்கள் எத்தனை
ஏமாற்றங்கள் அத்தனையும்
மறந்து எந்தன் உதட்டில்
புன்னகையை கொடுத்த
என் உத்தமனே !!!
காதலனாய் வந்து எந்தன்
அன்னையாகி மரணத்தை
கொன்று ஜனனத்தை கொடுத்த
என் தாயானவனே !!!
மறு பிறப்பிலும் வேதனையுடன்
நான் பிறந்திடனும் நீ என்னை
நேசிதிடனும் அருகில் இருந்து
என் கணவனாய்............
v.m.j.gowsi

உள்ளம் பதறி உயிரில் நோகுதடா
உந்தன் நினைவாலே !!
பூமியிலே ஒரு ஜீவனாய் எனக்கும்
சுவாசிக்க ஆசைதான் ....
உள்ளுக்குள் இருக்கும் உன் நினைவு
உன் பிரிவை சொல்லி
என் உயிரோ மரணத்தை சுவாசிக்க
ஆசைப்படுதடா

இன்னும் நான் உயிர் வாழ்வதே
நீ வாழ்வதால் தான்
பிரிவில் வாழ்ந்திடுவேன் எப்படியும்
ஒரு நொடி நீ என்னை வெறுத்தால்
உயிரையே விட்டுவேன்
உன் பிரிவில் வாழும் நான் உன்
வெறுப்பில் வாழவே மாட்டேன் .......
v.m.j.gowsi

உண்மை காதல் கண்டு
உன்னிடம் சரணடைந்தேன்
உந்தன் உருருவம் காணாமலே
உன் உருவம் கண்ட நாள் முதல்
உன்னை பிரிந்ததால் உள்ளம்
உடைந்து வருந்தியே வாழ்கிறேன்
என் உயிரானவனே !!!
v.m.j.gowsi

Friday, June 24, 2011


உறவுகள் ஆயிரம் ஆனால்
உணர்வுகளை புரிந்து
கொள்ள ஒரு உறவும்
இல்லை ...........

உன்னோடு வாழும் வரம்
வாங்கி வராத
துர்பாக்கிய சாலி நான்
உந்தன் அன்பில் வாழும்
அதிஷ்டசாலி நான்
v.m.j.gowsi
கடலை கூட கடந்திடலாம்
கண்ணீர் இன்றி வாழ்கையை
கடக்கவே முடியாது ......
v.m.j.gowsi

நெற்றி பொட்டில் முத்தமிட
உந்தன் மீசை குழந்தை
என்னை சீண்ட
அன்பாய் அரவணைத்து
ஆசையாய் முத்தமிட்டு
நான் கலங்கினால் உன்
மடியில் தலை சாய
வைத்து ஆறுதல் கூற
என்னை குழந்தையென
அரவணைக்கும் என்
தந்தையென உன் அருகில்
நான் வாழ்ந்திடனும்
என் உயிரானவனே !!
v.m.j.gowsi

Thursday, June 23, 2011


பெண்களின் மனதை புரிவது
கஷ்டம் என்று யாரோ ஒருவர்
சொன்னார் ..அதனால் தான்
பெண்களின் மனதை புரிந்து
கொள்ளாமல் கஷ்டத்தை
கொடுக்கின்றனரா ?
v.m.j.gowsi

பிரிவால் கதறும் என்
காதலை கவிதையாய்
காற்றிலே அனுப்பிடுவேன்
என்னவனே அணைத்துக்கொள்
உன்னுடன் என் கவிதைகளையாவது ...
v.m.j.gowsi
காதல் சிலருக்கு கல்யாணமாகிறது
காதல் பலருக்கு கண்ணீராகிறது.........
v.m.j.gowsi

நினைவுகளுடன் வாழ்ந்தால் என்ன
நிஜங்களுடன் வாழ்ந்தால் என்ன
எல்லாமே உனக்கான உன்னுடனான
அன்பு தானே என் உயிரே
v.m.j.gowsi

யார் என்ன சொன்னாலும்
எதிர்த்து வாதாடும் நான்
உன்னிடம் மட்டும்
தவறாய் இருந்தாலும்
அமைதி காக்கிறேன்
v.m.j.gowsi

எனக்கு நல்ல தாய்
நீதானடா ...
உயிர் வாழவும்
உணவருந்தவும்
என்னிடம் சத்தியம்
வாங்கி செயல் படுத்த
வைக்கிறாயே .....
நான் கட்டு பட்டது
உன் சத்தியத்துக்கில்லை
உன் பாசத்துக்கடா ...
இல்லை இல்லை உன்
தாய் பாசத்திற்கு .....
v.m.j.gowsi

உறவுகளின் வார்த்தைகளால்
வலிக்கிறது உள்ளத்துக்கு
மட்டுமில்லை என் கண்களுக்கும்
தான் ....பாசத்துக்காக பரிதவிக்கும்
பாவி மட்டுமில்லை நான் .....
உள்ளம் உடையும் வார்த்தைகளால்
ஊமையாக்க பட்ட அனாதையும்
நானே .....
v.m.j.gowsi

நிஜமான ஒரு பாசம் தேடுகிறேன்
கிடைக்கவில்லை என்னவனே
நிஜமான பாசத்தை தந்த நீயும்
அருகில் இல்லை ....உண்மையான
ஒரு பாசம் வேண்டும் தலை
சாய ஒரு தாய் மடி வேண்டும் ......
என் தாயானவனே உன் மடி
வேண்டும் ...........
v.m.j.gowsi

உந்தன் பெயரை உச்சரிக்கும்
போதெல்லாம் அம்மா என்று
அழைப்பதை போலே
உணர்கிறேனடா
என் தாயானவனே .........
v.m.j.gowsi

உன்னை நேசித்தும் உன்னை
காணமுடியாத பாவியாய்
வாழ்ந்தேனடா உன்னை
பார்த்த பின்பு தான் எந்தன்
உயிரின் உருவம் பார்த்தேன் ..
என் உயிரானவனே !!!
v.m.j.gowsi

நீ வரும் பகலை எதிர் பார்த்து பார்த்து
எத்தனை இரவுகள் என்
விழிகள் தூங்காது
கண்ணீர் வடிக்கின்றது
தெரியுமா ???
v.m.j.gowsi

தோற்று போனேன் காதலிடம்
இல்லை என்னவனே
உந்தன் பாசத்திடம் .......
v.m.j.gowsi

என்னுள் இருப்பது இதயம்
இல்லையடா உந்தன் புன்னகை
நிறைந்த முகமே .கண்ணீருடனும்
என்னை சிரிக்க வைக்கிறாய் .........
v.m.j.gowsi

Wednesday, June 22, 2011


நீ சிரித்திடும் நேரமெல்லாம்
உன் உள்ளத்துக்குள் ஒழிந்திருந்து
நானும் சிரிதிடுவேனடா .......
v.m.j.gowsi

ஒரு முறை ஒரே ஒரு முறை
உந்தன் நேரடி பார்வை என் மேல்
பட்டால் போதுமடா நான் மோட்சம்
பெற்றுடுவேன் .........
v.m.j.gowsi

துன்பங்களையும் மறந்து சிரித்து
வாழ்கிறேன் ..என்னவனே உன்னை
காதலித்துக் கொண்டே வாழ்வதால்
v.m.j.gowsi

வாழ்வு விடியும் நாளுக்காய்
காத்திருக்கவில்லை என் நாட்கள்
வாழ்வு முடியும் நாளுக்காகவே
காத்திருக்கின்றன ........
v.m.j.gowsi

உன்னாலே வருந்தினாலும்
பாசம் கொண்டு உன்னையே
தேடி வருவேன் .......வருந்த
வைப்பவனும் நீதான் .....
தாயன்பை தந்தவனும்
நீதானேடா ...........
v.m.j.gowsi

உன்னை பிரிந்த பின்பு கவிதை
மட்டுமில்லை இசை கூட எனக்கு
நல்ல துணையாகி விட்டது ...
பல பாடல்களில் நம் காதலும்
வாழுதடா .........
v.m.j.gowsi

நம் காதல்
உண்மைக்காதல் தான்
ஆனா விதியின் விளையாட்டில்
என் கண்களுக்கு சேதம் அதிகம்
v.m.j.gowsi

என்னவனே நான் சாய்ந்து விட
உன் தோள்கள் கிடைத்தால்
என் துன்பங்கள் மரணித்து
விடுமா ?
v.m.j.gowsi
ஆற்றின் வேகம் கூட குறைவுதான்
என் கண்ணீருடன் ஒப்பிடுகையில் ....
v.m.j.gowsi

Tuesday, June 21, 2011


என்னவனே உனக்கு ஏதும்
வேதனை என்றால் என்
நெஞ்சம் அறிந்திடுமே ..
நான் வருந்திடுவேன் என்று
நீ மறைக்கும் போது நான்
படும் அவஸ்தை தெரியுமா ?
உனக்கு ..அப்படி அவஸ்தை
படுவதை விட உன் வேதனையை
அறியும் வலி எவ்வளவோ மேல் !
புரிந்து கொள் ........
v.m.j.gowsi

நாம் நடக்கும் போது
கூடவே வரும் மேகமாய்
நான் எங்கு சென்றாலும்
என்னுடனே நினைவாய்
வந்திடும் ஒரு நொடிப்பொழுதில்
நீ எனக்கு தொலை பேசியில்
அழைத்து உன்னில் என்னை
தொலைத்த நிமிடங்கள் ..........
V.M.J.GOWSI

Monday, June 20, 2011


ஒரு பார்வை
ஒரு ஸ்பரிஷம்
ஒரு கண்ணீர்
ஒரு புன்னகை
ஒரு முத்தம்
ஒரு ஜனனம்
ஒரு மரணம்
இத்தனையும் உன்னை
காணும் அந்த நொடியில்
நிகழ்ந்தால் போதும்
என் இந்த ஜென்மத்துக்கு ....
v.m.j.gowsi

Sunday, June 19, 2011


உன் மனதில் என்னை
வைத்து நீ அன்பு காட்டியது
என்னை அழவைக்கவா?
v.m.j.gowsi

உன் வருகைக்காக காத்திருக்கும்
எனக்கு விடை தான் தெரியவில்லை
கண்ணீரில் விடை தேடி காத்திருக்கேன்
நீ என்னுடன் சேர்ந்த பிறகுதான் என்
கண்ணீருக்கு விடுதலை போலும்
v.m.j.gowsi

அன்பு தேடி தவிப்பதே
என் வாழ்க்கை என்று
ஆனா பொழுது நீ தேடி
வந்து அன்பை தந்தாய்
இறுதி வரை உன்னோடு
வாழும் வரம் பெறாததால்
தவிப்பே வாழ்க்கையாய்
வாழ்கிறேன் ...கானல்
நீராகி போன என் காதலை
கவி நீராக்கி பருகியே
உயிர் வாழ்கிறேன்டா .
v.m.j.gowsi

விடியும் வேளை உன் முகத்தில்
விழிக்கவே என் விழிகளுக்கு
விருப்பம் ....நீதான் என் அருகில்
இல்லையே ?உன் குரலை கேட்ட
பின்பு தான் எனக்கு விடிகிறது
என் விடிவுக்கு அர்த்தம் வருகிறது
v.m.j.gowsi

காதலுக்கு கண்கள் இல்லை
என்பதை உணர்ந்தேன் உன்னை
பார்க்காமல் காதலித்த போது
என் கண்களையே வெறுத்தேன்
உன்னை பார்த்த போது ......
அன்பின் மொத்த உருவமே
என் தாயானவனே உன்னை
கண்ணுக்குள் தினமும்
வைத்து வணங்கும் வரத்தை
என் கண்கள் பெறாததால் .
i miss u daaaa
v.m.j.gowsi....

மனதால் உன்னை மணந்தவள்
நானடா
பிரிவு என்னை வாட்டுவதால்
மரணத்தை மறுமணம்
செய்ய துடிக்கிறேனடா ..........
அதற்கும் உன் அனுமதி வேண்டி
நிற்கும் பேதை நானடா
v.m.j.gowsi

Saturday, June 18, 2011


என்னவனே நான்
தோற்றுவிட்டேன்
என் கவிதைகளிடம் ..
என்னை விட உந்தன்
பாசத்தை அழகாய் சொல்கிறதே .......
v.m.j.gowsi

நீ தவறு செய்தாலும்
உன்னிடம் அடிமையாக
அடங்கியே போகிறேன்
கைபேசியில் நீ தந்த
முத்தங்களின் சிலிர்ப்பு
இன்னும் இன்னும் வேண்டும்
என்பதற்காக ......
v.m.j.gowsi

உன் முகம் பார்த்து பேசும் ஆசை
எனக்கில்லை உந்தன் விழிகளில்
என் முகம் பார்த்து பேசவே எனக்கு
ஆசையடா .....
v.m.j.gowsi

Friday, June 17, 2011


உன்னை மறந்துவிட என்
இதயம் எண்ணாது ஒரு
போதும் எனக்கு அன்பை
தந்த ஒரே ஜீவன் நீதானேடா !!!
என்ன தவறு செய்தலும்
என் இதயம் உன்னை
தண்டிக்காதுடா ..........
v.m.j.gowsi

எந்தன் ஆயுள் ரேகை
என் கைகளில் இல்லை
என் இதயத்தில் தான் இருக்கிறது
ஆமா என் ஆயுளானவனே !!! உன்
ஆயுள் தானே என் ஆயுள் .....
v.m.j.gowsi

உந்தன் நினைவு இன்னும்
இன்னும் என்னை சீண்டிக்கொண்டே
இருக்கிறது பிறக்க போறது இன்னும்
எத்தனை எத்தனை கவியோ ???
v.m.j.gowsi

என்னவனே உன்னை பிரிந்த நான்
தாயை பிரிந்த சேயடா............
v.m.j.gowsi

நீ குடிக்கும் சிகரெட் மீதும்
எனக்கு கோபம் தான் உன்
உதட்டோடு உறவாடி
உன் இதயத்தை
புண்ணாக்குகிறது ......
உன் உதட்டோடு உறவாடி
உன் இதயத்துக்கு சுகத்தை
கொடுக்கும் வரம் எனக்கில்லாததால் .......
v.m.j.gowsi

வலிகளை மறந்தோ இல்லை
மறைத்தோ எனக்கு வாழ
தெரியும் ..என்னவனே உன்
அன்பு என்னை தாலாட்டுவதால்
ஆனால் கண்ணீரை மறைக்கவோ
தடுக்கவோ முடியவில்லை
உன் பிரிவு என்னை வாட்டுவதால்
v.m.j.gowsi
கடற்கரை மணலிலே கால்கள்
புதைத்து உன் மடியில் நானும்
என் மடியில் நீயும் சாய்ந்து
காற்று வாங்குவோம் வா

ஒரு தேநீர் கோப்பையில்
இருவர் எச்சிலும் கலக்க
ஒன்றாய் தேநீர் பருகுவோம்
அன்பாக வா

புல்வெளியில் அமர்ந்து
ஒருவரை ஒருவர் காதலுடன்
அணைத்தே புகைப்படம்
எடுத்து மகிழ்வோம் வா

நிலவின் துணையோடு
நாம் இருவரும் முற்றவெளியில்
நம் கைவிரல்களை
எண்ணிக்கொண்டே நம்
காதல் கதை பேசிடுவோம் வா

அந்திசாயும் நேரம் வேப்பமர
நிழலிலே நீஎனக்கும் நான்
உனக்கும் தந்திடும் முத்தத்திலே
உடல் சிலிர்ப்போம் வா

கட்டாந்தரையிலே ஒற்றை பாய்
விரித்து ஒற்றை தலையணையில்
நீ தலை வைத்து உறங்க
உன் கையை என் தலையணை
ஆக்கி விடிய விடிய
அணைத்துக்கொண்டே
உறங்கிடுவோம் வா
v.m.j.gowsi

நீயே என் வாழ்க்கை துணை
என்று எண்ணினேன் விதி
பிரித்தது உன் நினைவுடன்
வாழ நினைத்தேன் உன்னை
சுமந்த என் இதயம் உன் நினைவை
கவிதையாக்கியது .....
பிரிவின் வலி நினைவின் வேதனை
தாங்கா முடியாமல் உயிரை
விட நினைத்தேன் உன்
காதல் காப்பாற்றியது...........
v.m.j.gowsi

Thursday, June 16, 2011


என் உயிரானவனே உனது உள்ளம்
என்ன அமுத சுரபியா
என் கவிதை தினம்
தினம் அதிகரித்துக்கொண்டே
போகிறதே !!! உனது அன்பின்
மறுபெயர் தானே எந்தன்
கவிதைகள் ............
v.m.j.gowsi

என்னவனே உன்னை காண
என் கண்கள் துடித்த
வலியை விட ....
உன்னை கண்ட
பின்பு என் இதயத்துக்கு
தான் வலிகள் கூட ...
உனக்கு சொந்தமாய்
நான் இல்லை.... எனக்கு
உனக்கு சொந்தமாகும்
தகுதியும் இல்லை என்பதால் ........
v.m.j.gowsi

காதலில் வென்றவர் கோடி
காதலில் தோற்றவர் கோடி
காதலில் வென்றும் தினம் தினம்
காதலில் தோற்ப்பவர்
நாம் மட்டுமே .

நீ கேட்டதுமே மறுப்பின்றி
எல்லாம் செய்வேன் ஆனா
உன்னருகில் இருந்து எதுகும்
செய்ய முடியவில்லையே
என்று எண்ணும் போது
காதல் வலி கண்களில்
கண்ணீராய் ..........

உன் அக்கறையும் பாசமும்
நானறிவேண்டா ..என் வேதனை
பார்த்து உன் மனம் குமுறுவதும்
எனக்கு தெரியும்டா ....உன்னருகில்
நானிருந்திருந்தால் வேதனையே
இல்லையே எனக்கு .......

நானும் சராசரி மனித பிறவிதான்
உனக்கான ஆசைகள் என்னுள்
நிறையவே இருக்கு ..நான்
நிறைவேற்ற தான் உன் அருகாமை
எனக்கில்லையடா ..........

தாயிருந்தும் தாயன்பிற்க்காய்
ஏங்கும் குழந்தையடா நான்
என் தாயானவன் நீ இருந்தும்
உன் மடி சாயும் பாக்கியம்
இல்லைதா துர்பாக்கியசாலி
நானடா ...........

காதலையும் கற்றுக்கொடுத்தாய்
காதலிக்கவும் கற்றுக்கொடுத்தாய்
வாழவும் செய்தாய் வாழ்க்கை
இல்லாமலே ஆமா உன்னோடு
வாழாதது வாழ்க்கையா ?
v.m.j.gowsi

உன்னோடு வாழும் உரிமையை
கொடுக்காத இறைவன் எனக்கு
உன் நினைவையும் உனக்கான
எதிர்பார்ப்பையும் சுமக்கும்
உரிமையை ஆவது தந்தாரே
என் உயிரே !!
v.m.j.gowsi