Wednesday, July 6, 2011


ஒவ்வொரு நிஜமான அழுகைக்கு
பின்னும் பொய்யான சிரிப்புண்டு
எந்தன் புன்னகை போலவே v.m.j.gowsi

நீ கனவில் வந்தாய்
உன்னுடைய தீண்டல்களால்
மாறாத பரவசத்தை ஏற்படுத்தி
விட்டாய் நானோ தூக்கம்
தொலைந்த பேதையாய்
v.m.j.gowsi

என் தாயானவனே என்
நினைவோடு நீ இருக்கும்
போது எனக்கென்ன பயம்
தோல்வி கூட சுகமாகும்
v.m.j.gowsi

என் கவிதையில் ஏதோ ஏக்கம்
தெரிகிறதாக சொல்கிறார்கள்
அவர்களுக்கு எப்படி தெரியும்
என் தாயானவனே உந்தன்
பாசத்தால் வந்த ஏக்கம் என்று
v.m.j.gowsi
உன் நினைவுகளின் கொஞ்சலில்
உணர்ந்தேன் தாயன்பை .....
v.m.j.gowsi

உன்னை நான் பெண்ணாய்
பிறந்து நேசித்தே பாவமடா
உன் நினைவில் தனிமையில்
வாழ வழி இல்லையே வலிக்குதடா ...
v.m.j.gowsi
உன் நினைவுகள் விழிகளில்
ஈரமாய் இருக்கும் மட்டும்
எந்தன் இரவுகள் விடியாத
இரவுகள் தானடா
v.m.j.gowsi

நிலவையே காதலித்தாய்
உணர்கிறேனடா உன் மீது
கொண்ட காதலை ஆம்
நீயும் என் வாழ்வில் தூரம்
தானே அந்த நிலவு போலவே ...
v.m.j.gows
ஆயிரம் கவிதை எழுதிவிட்டேன்
என் வாழ்க்கை கவி நீயோ என்னுடன்
இல்லை ....
v.m.j.gowsi

கண்களில் காதல் நினைவு
கைகளில் காதலன் கவிதை
தூக்கத்தை எங்கே போய்
தேடுவது சொல் என்னவனே ..
v,m,j,gowsi

நான் எழுதும் வார்த்தைகளின்
வலி யாருக்கும் புரியாது
என் கண்ணீரை தவிர .....
v.m.j.gowsi

என் உணர்வுகளால் என் மனதில்
நடத்தப்படும் நாடகத்தின்
அரங்கேற்றமே எந்தன் கண்ணீர் ..
v.m.j.gowsi

உறங்க போகும் போதுதான்
தெரிந்தது உன் பிரிவு உறக்கத்தை
பிரிக்க வந்தது என்று
v.m.j.gowsi
உயிரின்றி உடல் வாழுமா ?
உன் நினைவின்றி நான் வாழ்வேனா ?
v.m.j.gowsi

உன்னை நேசித்தது பாவமா
நீ என்னில் பாசம் வைத்தது
பாவமா ..இல்லை என்னை
காணாமலே நீ போனது
நம் காதல் சாபமா ...
v.m.j.gowsi

கனவில் ஆவது உன்னை
அணைத்து விட துடிக்கிறேன்
படுக்கை அறை வந்ததும்
தூக்கத்தை தேடியே இரவு
முடிகிறது காதல் செய்த
பாவத்திற்கு கண்ணீர் மட்டுமே
பரிசாய் ...........
v.m.j.gowsi

மரணத்தின் இறுதி நொடி துடிப்பு
சுகமானதாய் இருக்கும் என்று
உணர்கிறேன் உன்னாலே வந்த
எந்தன் உணர்வுகளின் துடிப்பால் ...
v.m.j.gowsi

நான் அனுபவிக்கும் வலிகள்
உன்னால் என்னுள் செத்துப்போன
உணர்வுகள் அனைத்தும்
கானல்நீராகி போன நம் காதலை
பருக துடிக்குதடா ......
v.m.j.gowsi

நான் வாழ்வது வேறோர் வாழ்வை
இருந்தாலும் நான் மரிப்பது
என்னவனே உன் நினைவோடுதானடா
v.m.j.gowsi

படைத்தவனுக்கு கருணை
இல்லை பேதை இவள் காதல்
மேல் ...கண்ணீர் உள்ளவரை
வாழ்க்கை கண்ணீர் தீர்ந்த
பின்பு மரண படுக்கை ...
v.m.j.gowsi

வலிகளை சுமந்து வாழ்வதை
விட மரணத்தை தழுவி
வாழலாம் என்று எண்ணினேன்
நீயோ சத்தியத்தை வாங்கி
வாழ வைத்து விட்டாய்
மரண வலியை விட நீ
அதிக வலியை தந்து
விட்டாயே!!!
v.m.j.gowsi

கடவுள் எனக்கு உயிர் வாழும்
வரத்தை கொடுக்க வில்லை
உன் நினைவில் வாழும்
வரத்தை கொடுத்து விட்டான்
இப்போது இறைவனை
வேண்டுகிறேன் உன்னோடு வாழும்
வரம் வேண்டும் ஏதோ
ஓர் ஜென்மத்தில் ........
v.m.j.gowsi

Tuesday, July 5, 2011


கண் தெரியாதவன் பாதை காட்டிய
கதையாய் என் வாழ்க்கை ....
காதலை காட்டியவன் வழி மாறி
சென்றதால் ...v.m.j.gowsi

கற்பனையில் உன்னோடு என் ஆயுளானவனே!!!

கழுத்தில் நீ இட்ட தாலியுடன்
உன்னை சேர்ந்த சந்தோஷத்தில்
கண்கள் உனக்காக ஆனந்த கண்ணீர்
வடிக்கும் நீயோ ஆறுதல் சொல்பவனாய்
இனி உன் கண்ணில் நான் கண்ணீரை
பார்க்ககூடாது என்கிறாய் தலை
அசைத்தவளாய் உன் தோள் சாய்கிறேன் ......

ஆனந்தமாய் ஆரம்பிக்கும் நம்
வாழ்க்கைக்கு அத்திவாரமாய்
நம் முதல் நாள் இரவு உன் மடியில்
இல்லை என் தாயானவன் மடியில்
இனிதே ஆரம்பிக்கிறது நம் காதல்
சாம்ராச்சியம் .....

விடிந்திடும் ஒவ்வொரு பொழுதும்
உன் நெற்றியில் முத்தமிட்டு
ஆரம்பித்து நெற்றியில் பொட்டிட்டு
கையில் தேநீருடன் உந்தன்
முத்ததுக்காய் காத்திருந்து
புன்னகையுடன் வாங்கிடுவேன்

நாள் போக்கில் உனக்கு செல்லமாய்
ஒரு பெண் குழந்தையும்
எனக்கு செல்லமாய் உன்னை
போலவே ஒரு அன்பு ஆண்
குழந்தையும் பெற்றெடுத்து
ஒரு கட்டிலில் ஒன்றாய்
உறங்கிடுவோம் ......

சின்ன சின்ன சண்டைகள்
அதிலும் உந்தன் அடிமையாவே
நான் இருப்பேன் தவறு நீ செய்தாலும்
தலை குனிந்தே வாழ்ந்திடுவேன்
உன்னிடம் படைத்த கடவுளே
உன் மீது நான் கொண்ட
பாசத்தால் அதிசயிக்கணும் .....

நம் பிள்ளைகளின் வாழ்கையை
நன்றாக அமைத்து கொடுத்து
விட்டு உனக்கு பணி செய்து கொண்டே
என் ஆயுள் தொடரனும் உந்தன்
ஆயுளின் இறுதி நாளன்று
என் ஆயுளையும் முடித்து கொள்வேன்

உனக்கு முன் நான் இறக்கும் வரத்தை
மட்டும் நான் இறைவனிடம் கேட்கவே
மாட்டேன் உன்னை நீங்கி நான் சென்றால்
என்னை விட யார் உன்னை அன்பாய்
பார்ப்பது .......
v.m.j.gowsi

Saturday, June 25, 2011


முத்தின் பெருமை சிற்பியின்
தியாகம் ...........
எந்தன் வாழ்வு என்னவனே
உந்தன் அன்பில் ......
v.m.j.gowsi

எந்தன் வாழ்வின் சோகங்களை
என்மீது கொண்ட அன்பிற்காய்
சுமந்த எந்தன் உயிரோவியமே !!!
எத்தனை ரணங்கள் எத்தனை
ஏமாற்றங்கள் அத்தனையும்
மறந்து எந்தன் உதட்டில்
புன்னகையை கொடுத்த
என் உத்தமனே !!!
காதலனாய் வந்து எந்தன்
அன்னையாகி மரணத்தை
கொன்று ஜனனத்தை கொடுத்த
என் தாயானவனே !!!
மறு பிறப்பிலும் வேதனையுடன்
நான் பிறந்திடனும் நீ என்னை
நேசிதிடனும் அருகில் இருந்து
என் கணவனாய்............
v.m.j.gowsi

உள்ளம் பதறி உயிரில் நோகுதடா
உந்தன் நினைவாலே !!
பூமியிலே ஒரு ஜீவனாய் எனக்கும்
சுவாசிக்க ஆசைதான் ....
உள்ளுக்குள் இருக்கும் உன் நினைவு
உன் பிரிவை சொல்லி
என் உயிரோ மரணத்தை சுவாசிக்க
ஆசைப்படுதடா

இன்னும் நான் உயிர் வாழ்வதே
நீ வாழ்வதால் தான்
பிரிவில் வாழ்ந்திடுவேன் எப்படியும்
ஒரு நொடி நீ என்னை வெறுத்தால்
உயிரையே விட்டுவேன்
உன் பிரிவில் வாழும் நான் உன்
வெறுப்பில் வாழவே மாட்டேன் .......
v.m.j.gowsi

உண்மை காதல் கண்டு
உன்னிடம் சரணடைந்தேன்
உந்தன் உருருவம் காணாமலே
உன் உருவம் கண்ட நாள் முதல்
உன்னை பிரிந்ததால் உள்ளம்
உடைந்து வருந்தியே வாழ்கிறேன்
என் உயிரானவனே !!!
v.m.j.gowsi

Friday, June 24, 2011


உறவுகள் ஆயிரம் ஆனால்
உணர்வுகளை புரிந்து
கொள்ள ஒரு உறவும்
இல்லை ...........

உன்னோடு வாழும் வரம்
வாங்கி வராத
துர்பாக்கிய சாலி நான்
உந்தன் அன்பில் வாழும்
அதிஷ்டசாலி நான்
v.m.j.gowsi
கடலை கூட கடந்திடலாம்
கண்ணீர் இன்றி வாழ்கையை
கடக்கவே முடியாது ......
v.m.j.gowsi

நெற்றி பொட்டில் முத்தமிட
உந்தன் மீசை குழந்தை
என்னை சீண்ட
அன்பாய் அரவணைத்து
ஆசையாய் முத்தமிட்டு
நான் கலங்கினால் உன்
மடியில் தலை சாய
வைத்து ஆறுதல் கூற
என்னை குழந்தையென
அரவணைக்கும் என்
தந்தையென உன் அருகில்
நான் வாழ்ந்திடனும்
என் உயிரானவனே !!
v.m.j.gowsi

Thursday, June 23, 2011


பெண்களின் மனதை புரிவது
கஷ்டம் என்று யாரோ ஒருவர்
சொன்னார் ..அதனால் தான்
பெண்களின் மனதை புரிந்து
கொள்ளாமல் கஷ்டத்தை
கொடுக்கின்றனரா ?
v.m.j.gowsi

பிரிவால் கதறும் என்
காதலை கவிதையாய்
காற்றிலே அனுப்பிடுவேன்
என்னவனே அணைத்துக்கொள்
உன்னுடன் என் கவிதைகளையாவது ...
v.m.j.gowsi
காதல் சிலருக்கு கல்யாணமாகிறது
காதல் பலருக்கு கண்ணீராகிறது.........
v.m.j.gowsi

நினைவுகளுடன் வாழ்ந்தால் என்ன
நிஜங்களுடன் வாழ்ந்தால் என்ன
எல்லாமே உனக்கான உன்னுடனான
அன்பு தானே என் உயிரே
v.m.j.gowsi

யார் என்ன சொன்னாலும்
எதிர்த்து வாதாடும் நான்
உன்னிடம் மட்டும்
தவறாய் இருந்தாலும்
அமைதி காக்கிறேன்
v.m.j.gowsi

எனக்கு நல்ல தாய்
நீதானடா ...
உயிர் வாழவும்
உணவருந்தவும்
என்னிடம் சத்தியம்
வாங்கி செயல் படுத்த
வைக்கிறாயே .....
நான் கட்டு பட்டது
உன் சத்தியத்துக்கில்லை
உன் பாசத்துக்கடா ...
இல்லை இல்லை உன்
தாய் பாசத்திற்கு .....
v.m.j.gowsi

உறவுகளின் வார்த்தைகளால்
வலிக்கிறது உள்ளத்துக்கு
மட்டுமில்லை என் கண்களுக்கும்
தான் ....பாசத்துக்காக பரிதவிக்கும்
பாவி மட்டுமில்லை நான் .....
உள்ளம் உடையும் வார்த்தைகளால்
ஊமையாக்க பட்ட அனாதையும்
நானே .....
v.m.j.gowsi

நிஜமான ஒரு பாசம் தேடுகிறேன்
கிடைக்கவில்லை என்னவனே
நிஜமான பாசத்தை தந்த நீயும்
அருகில் இல்லை ....உண்மையான
ஒரு பாசம் வேண்டும் தலை
சாய ஒரு தாய் மடி வேண்டும் ......
என் தாயானவனே உன் மடி
வேண்டும் ...........
v.m.j.gowsi

உந்தன் பெயரை உச்சரிக்கும்
போதெல்லாம் அம்மா என்று
அழைப்பதை போலே
உணர்கிறேனடா
என் தாயானவனே .........
v.m.j.gowsi

உன்னை நேசித்தும் உன்னை
காணமுடியாத பாவியாய்
வாழ்ந்தேனடா உன்னை
பார்த்த பின்பு தான் எந்தன்
உயிரின் உருவம் பார்த்தேன் ..
என் உயிரானவனே !!!
v.m.j.gowsi

நீ வரும் பகலை எதிர் பார்த்து பார்த்து
எத்தனை இரவுகள் என்
விழிகள் தூங்காது
கண்ணீர் வடிக்கின்றது
தெரியுமா ???
v.m.j.gowsi

தோற்று போனேன் காதலிடம்
இல்லை என்னவனே
உந்தன் பாசத்திடம் .......
v.m.j.gowsi

என்னுள் இருப்பது இதயம்
இல்லையடா உந்தன் புன்னகை
நிறைந்த முகமே .கண்ணீருடனும்
என்னை சிரிக்க வைக்கிறாய் .........
v.m.j.gowsi

Wednesday, June 22, 2011


நீ சிரித்திடும் நேரமெல்லாம்
உன் உள்ளத்துக்குள் ஒழிந்திருந்து
நானும் சிரிதிடுவேனடா .......
v.m.j.gowsi

ஒரு முறை ஒரே ஒரு முறை
உந்தன் நேரடி பார்வை என் மேல்
பட்டால் போதுமடா நான் மோட்சம்
பெற்றுடுவேன் .........
v.m.j.gowsi

துன்பங்களையும் மறந்து சிரித்து
வாழ்கிறேன் ..என்னவனே உன்னை
காதலித்துக் கொண்டே வாழ்வதால்
v.m.j.gowsi

வாழ்வு விடியும் நாளுக்காய்
காத்திருக்கவில்லை என் நாட்கள்
வாழ்வு முடியும் நாளுக்காகவே
காத்திருக்கின்றன ........
v.m.j.gowsi

உன்னாலே வருந்தினாலும்
பாசம் கொண்டு உன்னையே
தேடி வருவேன் .......வருந்த
வைப்பவனும் நீதான் .....
தாயன்பை தந்தவனும்
நீதானேடா ...........
v.m.j.gowsi

உன்னை பிரிந்த பின்பு கவிதை
மட்டுமில்லை இசை கூட எனக்கு
நல்ல துணையாகி விட்டது ...
பல பாடல்களில் நம் காதலும்
வாழுதடா .........
v.m.j.gowsi

நம் காதல்
உண்மைக்காதல் தான்
ஆனா விதியின் விளையாட்டில்
என் கண்களுக்கு சேதம் அதிகம்
v.m.j.gowsi

என்னவனே நான் சாய்ந்து விட
உன் தோள்கள் கிடைத்தால்
என் துன்பங்கள் மரணித்து
விடுமா ?
v.m.j.gowsi
ஆற்றின் வேகம் கூட குறைவுதான்
என் கண்ணீருடன் ஒப்பிடுகையில் ....
v.m.j.gowsi

Tuesday, June 21, 2011


என்னவனே உனக்கு ஏதும்
வேதனை என்றால் என்
நெஞ்சம் அறிந்திடுமே ..
நான் வருந்திடுவேன் என்று
நீ மறைக்கும் போது நான்
படும் அவஸ்தை தெரியுமா ?
உனக்கு ..அப்படி அவஸ்தை
படுவதை விட உன் வேதனையை
அறியும் வலி எவ்வளவோ மேல் !
புரிந்து கொள் ........
v.m.j.gowsi

நாம் நடக்கும் போது
கூடவே வரும் மேகமாய்
நான் எங்கு சென்றாலும்
என்னுடனே நினைவாய்
வந்திடும் ஒரு நொடிப்பொழுதில்
நீ எனக்கு தொலை பேசியில்
அழைத்து உன்னில் என்னை
தொலைத்த நிமிடங்கள் ..........
V.M.J.GOWSI

Monday, June 20, 2011


ஒரு பார்வை
ஒரு ஸ்பரிஷம்
ஒரு கண்ணீர்
ஒரு புன்னகை
ஒரு முத்தம்
ஒரு ஜனனம்
ஒரு மரணம்
இத்தனையும் உன்னை
காணும் அந்த நொடியில்
நிகழ்ந்தால் போதும்
என் இந்த ஜென்மத்துக்கு ....
v.m.j.gowsi