Thursday, June 9, 2011


கை நீட்டியே உன்னிடம் அன்பை
கேட்டேன் ....கைவிட்டு சென்ற
நேரம் உந்தன் கை விரல் கொடுத்து
உனக்கே என்னை சொந்தமாக்கி
இருக்கலாமே .........

காலம் முழுவதும் உன்னை எந்தன்
நெஞ்சில் சுமக்கும் நான் உயிரிலும்
சுமந்து உன் ஆசைகளை
நிறைவேற்றி இருப்பேனே .......

பிரிவின் வலியோ உந்தன்
கைகளுக்குள் முகம்
புதைத்து அழுது விட
சொல்லுதடா ...
நிழலே எனக்கு சொந்தமில்லை
நிஜத்தை எங்கே தேடுவேன் ...........

எந்தன் நெஞ்சுக்குள் ஒரு
ஆசை இருக்குடா ஒரு
ராத்திரி ஆவது கவலை
இன்றி கண்மூடி தூங்கனும்
அதுவே எந்தன் இறுதி
தூக்கமாய் ஆக வேண்டும்
உந்தன் நினைவோடு
v.m.j.gowsi

No comments:

Post a Comment