
நீ இல்லாத என் வாழ்க்கை
பயணம் எவ்வளவு கறடு
முரடானது என்று அறிவாயா
நீ ? தினமும் வலியால் நான்
மூச்சு திணறுகிறேன் என் உயிரே ..
உன்னை காதலித்ததை விட
உன்னை காதலித்தும் இதுவரை
உன்னை சந்திக்காமலே நம்
காதல் பயணம் நீண்ட தூரம்
சென்று விட்டதே என்னும்
வலிதான் அதிகமடா .......
நீ இல்லா இரவு பொழுதுகளில்
தூக்கமின்றி தனிமையில்
துடித்தாலும் உன் நினைவுகளில்
கண்ணீரில் கரையுதடா என்
விழித்த விழிகளுக்கு ...........
வாழ்க்கை தேடலில் நான்
தொலைத்த இன்பத்தை
எப்போதும் உன்னால் திருப்பி
தர முடியாது ஆனாலும் வாழ்கிறேன்
என்றோ ஓர்நாள் உன்னை
பார்க்கும் இன்பமாவது கிடைக்கும்
என்று .........
v.m.j.gowsi
No comments:
Post a Comment