
என்னுள் வாசம் செய்யும்
என்னவனே உன் வாசம்
அறியும் நாள் தெரியாமலே
உந்தன் காதலில் வாழ்கிறேனடா
....
உந்தன் காதல் என்னுள் வாழும்
வரை என் உயிரும் உன்னோடு
ஒட்டியே வாழும் தொலை
தூரத்தில் நீ வாழ்ந்தாலும்
உன் மீது கொண்ட ஆசைகளை
என்னுள் பூட்டியே வாழ்கிறேன்
ஏதோ ஓர் ஜென்மத்தில் எந்தன்
அத்தனை ஆசையையும் உன்னுள்
வந்து சேர்க்கணும் என்பதற்காக
v.m.j♥ gowsi
No comments:
Post a Comment