
தந்தையை இழந்து
சகதியில் விழுந்தவளை
உந்தன் அன்பாலே
நீ நிஜமாக என்னை
சிரிக்க செய்தாய் ...
நான் பிறக்கும் போதே
இறைவன் எழுதிவிட்டான்
உறவுகள் இருந்தும் நான்
அநாதை என்று ....ஆம்
நீ கூட எனக்காக இல்லையே
யார் சிரிப்பையும் நான்
பறித்ததில்லை
ஆனால் யாரும் என்னை
சந்தோசமாக சிரிக்க
வைத்ததில்லை ..
வாழும்போதே பலர் என்னை
துன்பக்கடலில் மட்டுமே
நீந்த வைத்து விட்டனர்
கரை ஏற வழி தெரியாமல்
நானும் இங்கே ......
என்னவனே உனக்காய் நான்
என்று எண்ணி வாழ்ந்த
போது இருந்த சந்தோசம் இன்று
இல்லையடா ....துருப்பிடித்த
ஆணி என்றோ ஓர் நாள்
உடையும் தானே .....
நானும் அவ்வாறே ......
v.m.j.gowsi
No comments:
Post a Comment